இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும்: அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனையைத் விரைவில் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வலியுறுத்தினார்.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் வெள்ளை மாளிகையில் நிருபர்களைச்சந்தித்த புஷ், 2 நாடுகளும் சீரியசாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றுதெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுக்கு உதவுவோம் என்றும் புஷ்கூறினார். 2 நாடுகளுக்குமிடையே விரைவில் அமைதியை நிலைநாட்ட முஷாரப்பும் நானும் உறுதி எடுத்துள்ளோம்என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் 2 நாடுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே இந்தக் காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவோம் என்றும்புஷ் கூறிவிட்டார்.
தொடர்ந்து பேசிய முஷாரப், எல்லையிலிருந்து இந்தியா உடனடியாகப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.
படைகளை விலக்கிக் கொண்ட கையோடு பேச்சுவார்த்தைக்கும் வரவேண்டும் என்றும் இந்தியாவுக்கு முஷாரப்அழைப்பு விடுத்தார்.
ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரை படைகளை விலக்கப்போவதும் இல்லை, பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்று இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications