ஏற்காட்டில் ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா செடிகள் அழிப்பு
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளைப் போலீசார்பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
ஏற்காடு மலைப் பகுதிகளில் ஏராளமான கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக சேலம் போலீசாருக்கு புகார்கள்வந்த வண்ணம் இருந்தன. இந்தச் செடிகளை அழிப்பதற்காக சேலம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்கதிட்டமிட்டனர்.
இதன்படி 40 போலீசார் ஏற்காடு சென்றனர். கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்களான கொம்புத்தூக்கு, கோவிலூர்போன்ற கிரமாங்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால் போலீசார் நடந்தே அங்கு சென்றனர்.
கஞ்சா செடிகளை அழிக்க முற்பட்டபோது அருகிலிருந்த கிராம மக்கள் ஒன்று கூடி போலீசாரை தாக்க முற்பட்டனர்.இதையடுத்து கஞ்சாவினால் ஏற்படும் தீமைகளையும், கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம் என்றும் போலீசார்அந்த மக்களுக்கு விளக்கிக் கூறினர்.
இதனால் மக்கள் கலைந்து சென்றனர். பிறகு போலீசார் அந்தச் செடிகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
சுமார் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்ததாகவும், அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல்இருக்கும் என்றும் போலீசார் கூறினர்.
கஞ்சா செடிகளை பயிரிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும்அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications