காண்டஹார் விமான தளத்தில் திடீர் துப்பாக்கிச் சண்டை

Subscribe to Oneindia Tamil

காண்டஹார்:

காண்டஹார் விமானத் தளத்தில் அமெரிக்கப் படையினருக்கும் அடையாளம் தெரியாத சிலருக்குமிடையே திடீர்துப்பாக்கிச் சண்டை நடந்தது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காண்டஹாரில் உள்ள விமானத் தளத்தில் சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

நேற்று திடீரென்று அமெரிக்கப் படையினரை நோக்கி அடையாளம் தெரியாத சிலர் சராமாரியாகத் துப்பாக்கியால்சுட ஆரம்பித்தனர். சில சிறிய ரக ஏவுகணைகள்கூட அமெரிக்க படையினரின் மத்தியில் வந்து விழுந்தன.

இதையடுத்து அமெரிக்கப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மோர்ட்டார் ரகத் துப்பாக்கிகள் மற்றும்மெஷின் கன் ஆகியவற்றைக் கொண்டு அந்த அடையாளம் தெரியாத நபர்களை நோக்கிச் சுட்டனர்.

இச்சம்பவத்தில் 2 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.

அடுத்த சிறிது நேரத்திலேயே அமெரிக்கப் படையினர் ஏ.எச்.-64 அப்பாச்சி என்ற ஹெலிகாப்டரில் விரைந்துசென்று தாக்குதல் நடத்தியவர்களைத் தேடினர்.

பின்னர் தாக்குதல் நடத்திய 7 பேரை அமெரிக்கப் படையினர் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஆப்கானிஸ்தான்ராணுவத்தினர் என்பது தெரிய வந்தது.

விமானத் தளத்தைச் சுற்றிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த 7 ஆப்கானிய வீரர்கள் எதற்காக அமெரிக்கப்படையினரை நோக்கிச் சுட்டார்கள் என்பது தெரியவில்லை.

இவர்கள் ஆப்கானிய வீரர்கள் என்று தெரிந்ததும் அவர்களை அமெரிக்கப் படையினர் விடுவித்து விட்டனர். இந்த7 பேருடன் வந்த மற்ற மூவரும் தாக்குதல் நடத்திய பிறகு ஒரு வாகனத்தில் ஏறித் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+