அனுமதியின்றி அதிமுகவினர் விளம்பரம் செய்ய ஜெ. தடை

Subscribe to Oneindia Tamil

தேனி:

தன்னுடைய அனுமதியின்றி அதிமுகவினர் எந்தவிதமான விளம்பரமும் செய்யக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.

ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளருமான ஜெயலலிதா தேர்தல் செலவு உள்பட தேர்தல் கமிஷனின் கண்களைஉறுத்தும் பல விஷயங்களில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறார்.

உசிலம்பட்டி அதிமுக பிரமுகர் ஒருவர் இன்றைய செய்தித் தாள்களில் ஜெயலலிதாவை வரவேற்றும் அவருக்குஓட்டளிக்குமாறும் விளம்பரம் செய்திருந்தார்.

இதைக் கண்டு கோபமுற்ற ஜெயலலிதா, அந்தப் பிரமுகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களிலோ பத்திரிக்கைகளிலோ தன்னுடைய அனுமதி இல்லாமல்அதிமுக தொண்டர்களோ பிரமுகர்களோ விளம்பரம் செய்யக் கூடாது என்று உடனடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிமுக தொண்டர்களும் பிரமுகர்களும் சிறிது குழம்பிப் போயுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஆண்டிப்பட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும்போது, ஒரு சுவர் போஸ்டர்விளம்பரத்தைப் பார்த்த ஜெயலலிதா மகிழ்ந்து போனது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+