நாமக்கல் மலை குகையில் சிக்கிய 2 சிறுவர்கள் மீட்பு
நாமக்கல்:
நாமக்கல் மலைக்கோட்டையில் ஏற முயன்று அங்குள்ள ஒரு குகைக்குள் சிக்கிய 2 சிறுவர்களைத் தீயணைப்புவீரர்கள் 6 மணி நேரப் போராட்டுத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர்.
நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும்கண்ணன் ஆகிய 2 சிறுவர்களும் நாமக்கல் மலைக்கோட்டையில் ஏற ஆசைப்பட்டனர்.
அதன்படி மலைக்கோட்டையில் ஏறி மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்த அந்த 2 சிறுவர்களும் அதில் ஏறத்தொடங்கினர்.
ஆனால் பாதி மலையில் ஏறிய பிறகு அந்தச் சிறுவர்களின் எதிரே ஒரு குகை தென்பட்டது. எப்படியோ அந்தக்குகைக்குள் சென்றுவிட்ட 2 சிறுவர்களும் அதற்கு மேல் எப்படிச் செல்வது என்று தெரியாமல் முழித்தனர்.
இதையடுத்து அந்தக் குகைக்குள் இருந்தவாறு அந்த 2 சிறுவர்களும் தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரல்எழுப்பினர்.
அதைக் கேட்ட சிலர் குகைக்குள் எப்படிச் செல்வது என்று வழி தெரியாததால், உடனடியாகத் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களாலும் குகைக்குள் எப்படி அந்த 2 சிறுவர்களும் சென்றார்கள் என்றுவியந்தவாறே அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்படி மலையின் மேற்பகுதியில் கயிற்றைக் கட்டிக் கொண்டு அந்தக் கயிறு வழியாகக் கீழே இறங்கிக் குகையைஅடைந்து 2 சிறுவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அந்த 2 சிறுவர்களும் பின்னர் அவர்களுடையபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications