கோவை சிறையில் உண்ணாவிரதம் இருந்த 13 பேர் சீரியஸ்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட 30 கைதிகளில் 13 பேர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் கடந்த 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 167 பேர் கைதாகி கோயம்புத்தூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 கைதிகள் கடந்த திங்கள்கிழமை முதல் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் இருக்கஆரம்பித்தனர்.

குண்டு வெடிப்பு வழக்கில் தங்களுக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளைவிரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதுவரை தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி அவர்கள்காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

கடந்த திங்கள்கிழமை காலையிலிருந்தே அந்த 30 கைதிகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவைப் பெற்றுக்கொள்ள மறுத்தனர்.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உண்ணாவிரதம் இருந்தவ கைதிகளில் 2 பேர் மயங்கிச் சாய்ந்தனர்.அவர்கள் உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அங்கு தங்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று அவர்கள் முதலில் பிடிவாதம் பிடித்தாலும், தற்போதுஅவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மேலும் 4 பேர் மயங்கியதையடுத்து, அவர்களும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே தொடர்ந்து 4 நாட்களாக எதுவும் சாப்பிடாததால் நேற்றும் 7 பேர் மயங்கி விழுந்தனர்.அவர்களையும் போலீசார் விரைந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 13 கைதிகளுக்கும் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+