கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு
சென்னை:
கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நிருபர்களிடம் பன்னீர்செல்பம் கூறியதாவது:
ஏற்கனவே திமுக அரசு 15 சதவீத இட ஒதுக்கீட்டை கிராமப்புற மாணவர்களுக்கு அளித்திருந்தது. ஆனால்கிராமப்புற மாணவர்களை மேம்படுத்துவதற்காக எங்கள் அரசு அந்த ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்தியது.
ஆனால் இந்த ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் இந்த ஆண்டுமாணவர்களுக்குப் பாதிப்பில்லை.
ஆனாலும் தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்வோம்.
காவிரிப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் அளவுப் பிரச்சனைதான். அவர்கள் இவ்வளவு தண்ணீர் திறந்துவிட்டோம் என்கிறார்கள்.
ஆனால் மேட்டூருக்கு வந்து சேரும் அளவு வரவில்லை. இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைச் சரி செய்வதற்காகஒரு குழு அமைக்கச் சொல்லியிருக்கிறோம்.
இவ்விஷயத்தில் நடுநிலை வகித்து மாநில அரசின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது மத்திய அரசின்கடமையாகும் என்றார் பன்னீர்செல்வம்.
குடகனாறு அரசினர் விருந்தில்லத்தில் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை ரத்து செய்யப்பட்டது குறித்து நிருபர்கள்கேட்டபோது, அப்பிரச்சனை முடிந்துவிட்டது என்றும் அது சிறிய பிரச்சனைதான் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications