கோவை அருகே அரசு நிலத்தில் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை அகற்றம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் அருகே அரசு நிலத்தில் நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை அகற்றப்பட்டதால் அங்கு சில மணிநேரத்திற்கு பதட்டம் நிலவியது.

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் உள்ள அரசு நிலத்தில் இந்து மக்கள்கட்சி என்ற இயக்கத்தை சேர்ந்த சிலர் இரு தினங்களுக்கு முன்பு அனுமதியில்லாமல் ஒரு பிள்ளையார் சிலையைநிறுவினர்.

இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அது குறித்து புகார்களும் கொடுக்கப்பட்டன.

இதனால் வருவாய்துறை அதிகாரிகளும், சில போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேற்று (சனிக்கிழமை) காலை சென்றுஅந்தப் பிள்ளையார் சிலையை அகற்றினர்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டு வந்த சிலர், பிள்ளையார் சிலையை அகற்றியதை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.இதனால் அந்த இடத்தில் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால் அதற்குள் மேலும் பல போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலவரக்காரர்களை விரட்டினர்.இதனால் அந்த பகுதியில் ஒரு சில மணி நேரத்திற்குப் பெரும் பதட்டம் நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+