இந்துக் கோவில்களின் கொடிமரங்களுக்கு தங்க முலாம் பூசும் முஸ்லீம் தொழிலாளி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இந்துக் கோவில்களின் கொடி மரத்துக்கு ஒரு முஸ்லீம் தொழிலாளி தங்க முலாம் பூசுகிறார்.
தொழிலுக்கு மதம் ஒரு தடையில்லை என்று உணர்த்தியிருக்கிறார் தாஜுதீன் (46) என்ற அந்த முஸ்லிம்தொழிலாளி.
கொடிமரத்துக்கு தங்க முலாம் பூசும் தொழிலை தன்னுடைய தந்தை அமீர்ஜானிடம் இருந்து தாஜுதீன் கற்றுக்கொண்டிருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகர் கோவில்களுக்குகொடிமரத்தை சுற்றி தங்க முலாம் பூசும் வேலை செய்து தந்துள்ளார்.
கோயம்புத்தூர் அய்யப்ப சேவா சங்கம் வரும் 24ம் தேதி தங்க கொடிமரம் ஒன்று செய்து அதைத் துவக்கி வைக்கஉள்ளது. இந்த தங்கக் கொடிமரம் செய்ய தாஜுதீனை அய்யப்ப சேவா சங்கம் அணுகியுள்ளது.
இது குறித்து தாஜுதீன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
இந்து மதத்தை சேர்ந்தவர்தான் இந்தக் கோவில் வேலையை செய்ய வேண்டும் என்று யாரும் தடை விதிப்பதில்லை.நானும் இதை ஒரு தொழிலாகத்தான் பார்க்கிறேன்.
இந்தக் கொடிமரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்கு 6.5 கிலோ தங்கம் தேவை. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம்ஆகும். இதை செய்து முடிக்க 40லிருந்து 45 நாட்கள் ஆகும்.
இந்தக் கொடிமரத்தைச் சுற்றி 10 அடுக்கு காப்பர் தகடுகளால் சுற்றி அதற்கு பிறகு தங்க தகடுகளால் முலாம் பூசவேண்டும். இந்த தங்கத்தின் மெருகு 100 வருடங்கள் ஆனாலும் போகாது என்று கூறினார் தாஜுதீன்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications