கருணாநிதியைப் புறக்கணித்த போலீசார்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயலலிதாவுக்கு விழுந்து விழுந்து பாதுகாப்பு கொடுத்தபோலீசார், பிரச்சாரத்திற்கு வந்திருந்த கருணாநிதியைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள சில கிராமங்களில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும்நேற்று தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
ஏற்கனவே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதா செல்லும் கிராமங்களில் எல்லாம் 50 அடிக்கு ஒருபோலீசார் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக ஆங்காங்கே நிற்கும் இடங்களில் சில போலீஸ் உயரதிகாரிகள்கூடஅவருடைய வேனைச் சுற்றிலும் உள்ள கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் கருணாநிதி பிரச்சாரம் செய்யச் செல்லும் கிராமங்களின் வழியில் மட்டுமில்லாமல் அவருடைய வேனைச்சுற்றிலும்கூட திமுக பிரமுகர்களும் தொண்டர்களும்தான் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர்.
கருணாநிதிக்காக அனுப்பப்பட்டிருந்த ஒருசில போலீசார்கூட சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டுதான்நின்றார்களே தவிர, அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதுகூட இல்லை.
தன்னுடைய பிரச்சாரத்தின்போது கருணாநிதி இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. முதல்வர்பதவியை இழந்தாலும்கூட போலீசார் இன்னும் அவர் சொல்படிதான் ஆடிக் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறதுஎன்று கருணாநிதி பலமுறை குறைகூறிக் கொண்டிருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications