சென்னை மியூசியத்தில் புத்தர் சிலையின் தலை மாயம்
சென்னை:
சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த பழமைவாய்ந்த புத்தர் சிலையின் தலையை யாரோ சிலர்துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் சில அபூர்வ பொருட்கள்உள்ளன. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிடுவது வழக்கம்.
இங்கு 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று உள்ளது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சிலை சுண்ணாம்புக்கல்லால் ஆனது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மதிப்பு சில லட்ச ரூபாய் தேறும்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தப் புத்தர் சிலையின் தலையை யாரோ சிலர் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து அருங்காட்சியக அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலையைப் பார்வையிட வந்த யாரோ தான் துண்டித்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றுஅருங்காட்சியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
அருங்காட்சியக ஊழியர்கள் சிலருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து சமீபத்தில் அகற்றப்பட்ட கண்ணகி சிலையும் இந்தஅருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது நினைவு கூறத்தக்கது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications