ஜெ.க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட காங். பிரமுகர் நீக்கம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளயிட்ட காங்கிரஸ் கட்சியின்மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர் பார்த்தசாரதி. இவர் ஆண்டிப்பட்டியில்போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 2 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார்.
ஆண்டிப்பட்டியில் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறிய இளங்கோவனை தமிழக காங்கிரஸ்தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் பார்த்தசாரதி அறிக்கையில் கூறியிருந்தார்.
இதையடுத்து, அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவரை, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்இளங்கோவன்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அலுவலக பொறுப்பாளர் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பார்த்தசாரதிகட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காங்கிரஸ் உதவ வேண்டும்என்று கூறியுள்ளார்.
நாச்சியப்பனின் இந்த பேச்சு அதிமுக தரப்பில் பரபரப்பையும், காங்கிரஸ் தரப்பில் வெறுப்பையும்ஏற்படுத்தியுள்ளது. இவர் மீதும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் ராஜன்கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications