விருதுநகர் மாவட்டத்தில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விருதுநகர்:
பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் இன்று (செவ்வாய்க்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில்முழு அடைப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள்ஈடுபடுத்தப்படுவதாக சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளதை கண்டித்து, பட்டாசு மற்றும் தீப்பெட்டித்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று விருதுநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த பந்த் 24 மணி நேரம் நடைபெறும் என்று பட்டாசு தயாரிப்பாளர்கள்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், பொதுமக்கள்ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
அபாண்டமாக குற்றம் சாட்டும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை கண்டித்தும், அவர்கள் மீது உடனடியாக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போரட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பந்த் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. கார்கள்,ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தன.
வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் முக்கியத் தொழில் நகரங்களான சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்ஆகிய ஊர்களில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தில் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டுமே ஓடின.
இதற்கிடையே சிவகாசியில் ஏராளமான பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர்கள் திரண்டு நின்று பேரணி நடத்தமுயன்றனர். ஆனால் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால், கோஷங்களை மட்டும்எழுப்பிவிட்டு அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications