விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பாளர்கள் இன்று பந்த்
விருதுநகர்:
சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக கிறிஸ்தவ நிறுவனங்கள் தவறாகப் பிரச்சாரம்செய்து வருவதைக் கண்டித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் இன்று(செவ்வாய்க்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்துகின்றனர்.
சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பந்த்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள்ஈடுபடுத்தப்படுவதாக சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தேவையில்லாத, தவறான தகவலைப் பரப்பிவருவதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது பட்டாசு வெடிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.அதுபோன்ற பண்டிகை நேரங்களில் பட்டாசுக்குப் பதில் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைக்குமாறுமாணவர்களிடம் பல கிறிஸ்தவப் பள்ளிகள் மூளைச் சலவை செய்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறது என்பதற்காக உண்மையே இல்லாமல், குழந்தைத் தொழிலாளர்களைப்பயன்படுத்தி பட்டாசுகள் தயாக்கப்படுவதாக பொய்ப் பிரசாரத்தில் இந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகபட்டாசுத் தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.
சிவகாசியில் பதிவு பெற்ற 451 பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு எதிலுமே குழந்தைத்தொழிலாளர்கள் இல்லை. அரசு திடீர் சோதனைகள் நடத்தி எங்காவது குழந்தைத் தொழிலாளர்கள் காணப்பட்டால்,அந்தத் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சங்கத்தினர் கூறுகின்றனர்.
கிறிஸ்தவ நிறுவனங்கள், கிறிஸ்தவப் பள்ளிகளின் இந்த மத விரோத, தவறான நடவடிக்கையை உடனடியாக அரசுகண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் காலவரையற்றதாக மாற்றப்படும்என்றும் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தெவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த பந்த் 24 மணி நேரம் நடைபெறும் என்றும் அந்தச் சங்க நிர்வாகிகள்தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications