ஓய்ந்தது பிரச்சாரம்: ஆண்டிப்பட்டியில் வரலாறு காணாத பாதுகாப்பு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் அங்கு போட்டியிடும் அரசியல்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டன.
அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமானஜெயலலிதாவுக்குத் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இருப்பதால், ஆண்டிப்பட்டி தொகுதி நட்சத்திரஅந்தஸ்தைப் பெற்றுள்ளது.
கடந்த 6 நாட்களாக ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் சூறாவளிப் பயணம் செய்துபிரச்சாரம் செய்த ஜெயலலிதா, நேற்றுடன் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் சென்னைதிரும்பினார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கருணாநிதிகடந்த 16ம் தேதி ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் திமுக இளைஞரணித் தலைவரும் சென்னை மாநகர மேயருமான மு.க. ஸ்டாலின் உள்பட பல திமுகதலைவர்கள் கடைசி நேரம் வரை அனல் பறக்கப் பிரச்சாரம் செய்தனர்.
இதேபோல் மதிமுக வேட்பாளரான ஜெயச்சந்திரன் சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மத்தியஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்பட பல தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் 4வது முக்கியக் கட்சியான புதிய தமிழகம் சார்பாக அக்கட்சித்தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியே களத்தில் நின்று, தலித் ஓட்டுக்கள் முழுவதையும் தட்டிச் செல்வதற்காகமாய்ந்து மாய்ந்து பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து கடந்தஒரு மாதத்திற்கும் மேலாக பல தலைவர்களைச் சந்தித்த இத்தொகுதி அமைதியாக உள்ளது.
இந்த நேரத்திலிருந்து தேர்தல் நடைபெறும் நாளை மறுநாள் மாலை 5.30 மணி வரை இத்தொகுதியில் யாராவதுபிரச்சாரம் செய்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று தேர்தல்கமிஷன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு தீவிரம்:
இதற்கிடையே தேர்தலின்போது வன்முறையைத் தூண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அதிமுகவினரும்திமுகவினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டே உள்ளனர்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்1,000க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீசாரும் அடங்குவர்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 தமிழகப் போலீசாரும் 2 மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள்.
மேலும் 17 அதிரடிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் அக்குழுக்களைச்சேர்ந்த போலீசார் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
கலவரம் நடந்தால் அதைச் சமாளிப்பதற்காக ஏராளமான அவசரப் படைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 50 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகள் பதற்றம் நிலவும் பகுதிகளாகக்கருதப்படுகின்றன. இதனால் இந்தச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications