வாக்குறுதி கொடுப்பது தேர்தல் விதி மீறலாகுமா? - ஜெ. பாய்ச்சல்
தேனி:
தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்தது தேர்தல் விதிமுறைகளை மீறுவது ஆகாது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி, தொகுதி மக்களுக்கு திட்டப்பணிகளை கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார் என்றுதிமுக தலைவர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் அமைந்தது. நேற்று (திங்கள்கிழமை) மாலை 5.20மணிக்கு ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த போது கூறியதாவது:
நான் வாக்கு கொடுப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கருணாநிதி சொல்கிறார். வாக்குறுதிகொடுப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கருணாநிதி புதிய விதிமுறைகளை கூறியிருக்கிறார்.
தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தன்னை வெற்றி பெறச் செய்தால், இதை எல்லாம் செய்வேன் என்பதுவழக்கம். தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் என்னென்ன செய்யப் போகிறோம், எந்தத் திட்டங்களைசெயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள்.
நான் இங்கே தேர்தல் அறிக்கையை கூட வெளியிடவில்லை. இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்யப்போகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து வருகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப்போல் என்னையும் உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் குடும்பத்துஅங்கத்தினராக, அன்பு சகோதரியாக நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எனக்கு மகத்தானவெற்றியைத் தேடித் தாருங்கள் என்று அன்புடன் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications