60,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெ. வெல்வார்: 2வது கருத்துக்கணிப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுவார் என்று தனியார் கல்லூரிமாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டகருத்துக்கணிப்புப் படி ஜெயலலிதா 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தெரிய வந்தது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜெயலலிதாவின் வாக்குவித்தியாசம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கருணாநிதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுச் சென்றதற்குப் பிறகு திமுக வேட்பாளர் வைகை சேகருக்குகூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில், வைகை சேகர் வெற்றி பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால், கருத்துக் கணிப்புகள் வேறு விதத்தில் உள்ளன.
கருணாநிதி ஆண்டிப்பட்டி வருவதற்கு முன் ஜெயலலிதாவுக்கு 69 சதவீத வாக்காளர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் கருணாநிதிவந்து சென்ற பிறகு, ஜெயலலிதாவும் மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், ஆதரவு 81 சதவீதமாகஅதிகரித்துள்ளது என லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு 20 சதவீத ஆதரவே உள்ளது.
ஜெயலலிதாவின் பிரசாரம் தொகுதி மக்களை குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கிராமங்களுக்குச் செல்லும்போதுஜெயலலிதா எடுத்து வைக்கும் புள்ளி விவரங்கள், அவரது பேச்சு ஸ்டைல், கருணாநிதி குறித்த அவரது புகார்களை பெண்கள்மிகவும் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள்.
ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்ற பேச்சே தொகுதி மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.
கருணாநிதி வந்து சென்றதால் திமுகவினரிடம் புதிய உற்சாகம் கிளம்பியுள்ளதை மறுக்க முடியாது. கூடுதலாக 2 சதவீதவாக்காளர்களை திமுக தலைவர் கருணாநிதியின் மின்னல் வேகப் பிரசாரம் பெற்றுத் தந்துள்ளது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு 56 சதவீதம் ஆதரவு உள்ளது. வைகை சேகருக்கு 33.9 சதவீத ஆதரவு உள்ளது.
பெண்களிடம்தான் ஜெயலலிதாவுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. மொத்தம் 59.2 சதவீதம் பெண்கள் ஜெயலலிதாவுக்கேஎங்களது ஓட்டுக்கள் என்று கூறுகின்றனர். வைகை சேகருக்கு 35 சதவீத பெண்களின் ஆதரவு உள்ளது.
26 முதல் 40 வயது வரையிலான வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வரை ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர்.
ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படித்தவர்களில் 63 சதவீதம் பேர் ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர்.
பட்டப்படிப்பு படித்த வாக்காளர்கள் மத்தியில்தான் ஜெயலலிதாவுக்கு ஆதரவு மிகக் குறைவாக காணப்படுகிறது. அவருக்கும்,திமுக வேட்பாளருக்கும் சமமாக தலா 39.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ரஜினிக்கு செல்வாக்கு இல்லை:
ஆண்டிப்பட்டி மக்களிடையே ரஜினிக்கு செல்வாக்கு இல்லை என்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி காந்த்தே களத்தில் இறங்கியிருந்தால் அவருக்கு வெறும் 31 சதவீத வாக்குகளே கிடைத்திருக்கும்என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டிருந்தால் ஜெயலலிதாவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கலாம்.
அதேசமயம், யாராவது ஒரு வேட்பாளருக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தால் அந்த வேட்பாளருக்கு வெறும் 20 சதவீதவாக்குகளே கிடைத்திருக்கும்.
ஜெ. மீது திமுகவினர் நம்பிக்கை:
மேலும், ஒரு சுவாரசியமான தகவலும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, திமுகவினரிடையே கூட,ஜெயலலிதா தான் இந்தத் தேர்தலில் ஜெயிப்பார் என்ற அசாத்தியமான நம்பிக்கை உள்ளது.
திமுகவினரில் 61 சதவீதம் பேர் ஜெயலலிதாதான் ஜெயிப்பார் என்று கூறியுள்ளார்கள்.
பிற கட்சி ஓட்டுக்கள்:
மேலும் மதிமுக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலானவாக்காளர்களும் ஜெயலலிதாவுக்கே ஓட்டுப் போடப் போவதாக கூறியுள்ளனர்.
மொத்தத்தில், கிட்டத்தட்ட 60,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று ஜெயலலிதா ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications