தவறி விழுந்து 3 மாத குழந்தை இறந்த அதிர்ச்சியில் தாய் சாவு
மதுரை:
வீட்டு மாடிக்கு தூக்கிச் சென்றபோது தாயிடம் இருந்து தவறி விழுந்த 3 மாத கைக்குழந்தை பரிதாபமாக இறந்ததைக்கேட்ட அதிர்ச்சியில் அவரும் இறந்தார்.
மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 3 மாதங்களுக்குமுன்பு தான் சந்தோஷ்குமார் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகும் திலகவதி அவரது அம்மாவீட்டிலேயே இருந்தார்.
சம்பவ தினத்தன்று பகலில் திலகவதி தனது குழந்தையை மாடிக்கு தூக்கிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாகஅவரது கால்கள் இடறியது. இதனால் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டது.
உடனே வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த செய்தியை உறவினர்கள் திலகவதியிடம் தயங்கியபடியே கூறியுள்ளனர். இதைக் கேட்ட திலகவதி, "10 மாதம்சுமந்து பெற்ற குழந்தையின் சாவுக்கு நானே காரணம் ஆகி விட்டேனே" என்று கதறி அழுதார். இந்தஅதிர்ச்சியிலேயே அவரது உயிரும் பிரிந்து விட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications