வெள்ள நிவாரண வழக்கு: பன்னீருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்குப்பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள்வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வெள்ள நிவாரணம் அளிக்கக் கோருவது தொடர்பாக, தமிழக வழக்கறிஞர்கள் சங்கமான "பார்"கவுன்சிலின் தலைவர் வழக்கறிஞர் கருப்பன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ.20,000 வெள்ளநிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கருப்பன் அம்மனுவில்கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பக்தவத்சலம் ஆகியோர் அம்மனுவை இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
வழக்கறிஞர் கருப்பனின் இந்த மனுவுக்குப் பதில் மனு ஒன்றைத் தமிழக அரசு அடுத்த ஒரு வாரத்திற்குள் தாக்கல்செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்த நோட்டீஸ் ஒன்று பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications