ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக வெற்றி உறுதி: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளரானவைகை சேகர் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவார் என்று அக்கட்சித் தலைவரான கருணாநிதி இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
சென்னையில் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் பதவியை இழந்தாலும் இன்னும் முதல்வருக்குரிய தோரணையில்தான் ஜெயலலிதா பவனி வருகிறார்.
ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே நினைக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவர்சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எந்த வேலையையும் செய்யும்படி ஏவக் கூடாது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்மையான ஜனநாயக முறைப்படி அநியாயமாக இல்லாமல் தேர்தல் நடந்தால்வைகை சேகர் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவார் என்று கருணாநிதி கூறினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக பிரச்சாரம் செய்வதாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கருணாநிதி, தேர்தல் கமிஷன் மீது நாங்களும் மக்களும் வைத்துள்ள நம்பகத் தன்மையைக்காத்துக் கொள்ள வேண்டியது அதன் பொறுப்பு என்று கூறினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications