தேர்தலன்று வன்முறையைத் தூண்ட திமுகவினர் சதி: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
நாளை மறுநாள் (வியாழக்கிழமை, பிப்.21) ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலின்போது திமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட சதி செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறினார்.
கடந்த 13ம் தேதி கண்டமனூரில் தொடங்கி நேற்று இந்திரா நகரில் பிரச்சாரத்தை முடித்துள்ள ஜெயலலிதா, ஆறேநாட்களில் மொத்தம் 102 கிராமங்களில் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து தனக்காக ஆதரவு திரட்டினார்.
தினசரி மாலை 4 மணி முதல் பிரசாரம் முடியும் நேரமான இரவு 11 மணி வரை ஜெயலலிதா பிரச்சாரம்மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது அவரது தோழியான சசிகலாவும் உடனிருந்தார்.
நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, தேனியில் நேற்றிரவு தங்கினார். பின்னர் இன்றுகாலை அவர் தேனியிலிருந்து கார் மூலம் மதுரை வந்தார்.
மதுரையிலிருந்து விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணியளவில் சென்னை திரும்பினார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தலன்று திமுகவினர் வன்முறையில் ஈடுபட சதி செய்துள்ளதாக எங்களுக்குத் தகவல்வந்துள்ளது.
இதுகுறித்து நாங்களும் உடனடியாக தேர்தல் பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். தேர்தல் கமிஷன்இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த 1984ம் ஆண்டு இதே ஆண்டிப்பட்டி தொகுதியில் பெரும் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை அத்தொகுதி மக்கள்இன்னும் மறக்கவில்லை. அதனால் அத்தொகுதி மக்கள் மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்துஎன்னை வெற்றி பெறச் செய்வார்கள்.
என்னை எதிர்த்து திமுகவினர் எவ்வளவோ பிரச்சாரம் செய்தும் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் அவர்களைக்கண்டுகொள்ளவே இல்லை என்றார் ஜெயலலிதா.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் வரும் 24ம் தேதி உங்களுக்குப் பிறந்தநாள் பரிசாக அமையுமாஎன்று நிருபர்கள் கேட்டதற்கு, அதைப் பற்றி தான் இப்போது ஏதும் கூற முடியாது என்றும் முடிவுக்காகக்காத்திருப்போம் என்று பதிலளித்த ஜெயலலிதா காரில் ஏறி போயஸ் கார்டன் நோக்கிப் பறந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications