இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 12 தமிழக மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் 2 படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், தங்கள் கடல் எல்லையான வடக்குயாழ்ப்பாணத்தில் உள்ள பாய்ண்ட் பீட்ரோவுக்கு வந்து மீன் பிடித்ததாகக் கூறி 12 மீனவர்களையும் பிடித்துக்கொண்டு போய்விட்டனர்.
பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த 12 மீனவர்களையும் மார்ச் 5ம் தேதி வரை காவலில்வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
கடந்த 6 மாதங்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படை, தற்போது மீண்டும் அத்துமீறி தமிழகமீனவர்களைக் கைது செய்துள்ளது.












Click it and Unblock the Notifications