செக்ஸ் டாக்டர் ஸ்டைலில் ஒரு மிரட்டல்: 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரதட்சணைப் பணத்தை வாங்குவதற்காக வேறொரு நபருடன் தனது மனைவி ஆபாசமாக இருப்பதாகபுகைப்படத்தை சித்தரித்து மாமனாரை மிரட்டிய கணவனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவர் சுனிஸ் முகமது என்பவரைக்காதலித்தார். சுனிஸ் முகமது விளம்பர நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இருவரும் பெற்றோரது எதிர்ப்புகளை மீறி சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு முன்பு வரை விமலாவிடம் அன்பாக இருந்த சுனிஸ் முகமது திருமணத்திற்குப் பிறகு தனதுசுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார்.

வரதட்சணையாக தனக்கு ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்று கூறி விமலாவை துன்புறுத்தத் தொடங்கியுள்ளார்.இந்தப் பணத்தைப் பெறுவதற்கு குறுக்கு வழியையும் கடைப்பிடித்துள்ளார்.

விமலாவை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தனது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில்மனைவியின் நிர்வாணப் படத்தை ஸ்கேன் செய்து, அதை வேறொரு நபருடன் உல்லாசமாக இருப்பது போலமாற்றியமைத்துள்ளார்.

பின்னர் அந்தப் படத்தை தனது மாமனார் கிருஷ்ணமூர்த்திக்கு தபாலில் அனுப்பியுள்ளார். அத்துடன்இணைக்கப்பட்ட கடிதத்தில், உடனடியாக ரூ. 10 லட்சம் வரதட்சணையாக தர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைப் பார்த்துஅதிர்ந்த கிருஷ்ணமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்தார்.

புகாரை ஏற்றுக் கொண்ட போலீஸார் உடனடியாக தனிப் படை அமைத்து சுனிஸ் முகமதுவைக் கைது செய்தனர்.அவருக்குத் துணையாக இருந்ததாக அவரது தந்தை மொகைதீன் முகமதுவையும் போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+