சென்னை: ப்ளூ பிலிம் தயாரித்த 3 பேர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ப்ளூ பிலிம் தயாரித்த 3 பேரைப் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சில நடிகர், நடிகைகள்மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் ரோமன் ஆடியோ சர்வீஸ் மற்றும் சியாமளா டப்பிங் தியேட்டர் உள்ளது.

இங்கு மலையாள ப்ளூ பிலிம்களை தமிழில் "டப்பிங்" செய்வதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்துஉடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு விபச்சாரத் தடுப்பு பெண் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமாரிதலைமையில் தனிப்படை போலீசார் அந்த "டப்பிங்" தியேட்டரை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு மலையாள ப்ளூ பிலிம் ஒன்றை "என் சொந்தம்" என்ற பெயரில் தமிழுக்கு "டப்பிங்"செய்யப்பட்டுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"டப்பிங்" பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மணி, புஷ்பநாதன் மற்றும் ஷேக் அலாவுதீன் ஆகிய 3 பேரையும்போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

சுமார் 11 ரீல் ப்ளூ பிலிம் படச்சுருள் மற்றும் "டப்பிங்" கருவிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக மலையாளப் படத் தயாரிப்பாளரான புருஷன் என்பவரையும் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்ராஜு என்பவரையும் ப்ளூ பிலிமில் நடித்த நடிக-நடிகைகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோன்ற ப்ளூ பிலிம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மேலும் பலரையும் பிடிப்பதற்கு சென்னை போலீசார்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+