வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ராஜினாமா செய்யத் தயார்: பன்னீர்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தன் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகஇருப்பதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் புரட்சித் தலைவி "அம்மா" (ஜெயலலிதா) அவர்கள் ஜெயிக்கப் போவது நிச்சயம்.
எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த உடன் என்னுடையராஜினாமாவைப் பற்றி அறிவிப்பேன்.
அன்றைய தினமே தமிழக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடக்கலாம். அதற்குப் பிறகு ஜெயலலிதா சொல்படிஎந்தப் பதவியில் அமரச் சொல்கிறாரோ அதன்படி செய்வேன்.
முதல்வராக என்னுடைய பணிகளை நான் சரியாகவே செய்துள்ளேன் என்றார் பன்னீர்செல்வம்.
சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அன்றைய தினமே நடக்கும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளதையடுத்து,அன்றைக்கே அவர் ராஜினாமா செய்வார் என்றும் உடனடியாக ஜெயலலிதா பதவி ஏற்பார் என்றும் தெரிகிறது.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்காக விறுவிறுப்பாக சுறுசுறுப்புடன் தயாராகி வரும் சென்னைப் பல்கலைக்கழகமண்டபத்தைக் கண்டு கொதித்துப் போயுள்ள திமுகவினர், பன்னீர்செல்வத்தின் இந்தச் செய்தியைக் கேட்டம்கடுப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications