காஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை?
லண்டன்:
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனைத் தீவிரமாகதேடி வருவதாக பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மீது அல்-கொய்தா அமைப்பினர் விமானங்கள் கொண்டு தாக்கியதற்கு முக்கிய காரணமான பின்லேடனைத் தேடி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வேட்டையாடின. ஆனால்பின்லேடனை பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டான் என்றும் காஷ்மீரில் ஒளிந்துள்ளான் என்றும்அல்லது இறந்திருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படையினரும் பிரிட்டனின் விமானப்படை வீரர்களும் இணைந்த40 பேர் கொண்ட குழு ஒன்று, காஷ்மீரில் பின் லேடனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ்நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.
அதிநவீன கருவிகளைக் கொண்டு அவர்கள் பின்லேடனைத் தேடி வருவதாகவும், உளவு செயற்கை கோளின்உதவியுடன் அல்-கொய்தாவினரைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துஉள்ளது.
பின் லேடன் காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் ஒளிந்திருப்பதாகவும், அவனை ஹர்கத்-உல்-முஜாஹிதீன்அமைப்பை சேர்ந்த கொரில்லாக்கள் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறைக்கு இந்திய உளவுத்துறைகடந்த மாதம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
அதன் அடிப்படையிலேயே அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மறுப்பு:
ஆனால் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் பின் லேடனைத் தேடிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைஇந்தியா மறுத்துள்ளது.
எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அந்தப் பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்றுஇன்று (சனிக்கிழமை) கூறிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், எந்தக் காரணத்தைக் கொண்டும்அமெரிக்க, பிரிட்டிஷ் உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான கேள்விக்கேஇடமில்லை என்று கூறினார்.
அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குஅந்தச் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications