இன்று ஜெயலலிதாவின் 54வது பிறந்தநாள்
சென்னை:
இன்று ஜெயலலிதாவின் 54வது பிறந்த நாள் தினமாகும்.
பிறந்த நாள் தினமான இன்று அவர் ஆண்டிப்பட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ், தி.க. தலைவர் வீரமணி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்திஅனுப்பியுள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் போயஸ் கார்டனில் குவிந்தவண்ணம் உள்ளனர். அங்கு வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அவ்வப்போது தொண்டர்கள்ஆயிரம்வாலா சர வெடிகளைக் கொளுத்தியவண்ணம் உள்ளனர்.
அங்கு கூடியுள்ள நிருபர்களுக்கு ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து ஜிலேபிகள் தரப்பட்டன.
ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்பரிசாக வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தங்க மோதிரம் தவிர ராயபுரம் தெரசா நிர்மலா சிசுபவனில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒருவாரத்திற்குத் தேவையான பால் பவுடர், உணவுப் பொருட்கள், பிரியாணி உள்ளிட்டவற்றையும் அமைச்சர்ஜெயக்குமார் தருகிறார். இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ராயபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி ஜெயலலிதாவுக்குக் கிடைக்கப் போகும் பிறந்த நாள் பரிசாகஅமையப் போகிறது. அவர் வென்றால் முதல்வர் பதவி என்ற பெரிய பரிசையும் தட்டிச் செல்வார். வெற்றிஉறுதியானால் இன்றே அவர் முதல்வராகப் பொறுப்பேற்கவும் வாய்ப்புள்ளது.
அனைத்து எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் இன்று சென்னையில் இருக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளான இன்றே அவர் முதல்வராகப் பதவியேற்க முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications