மார்ச் 2ல் பதவியேற்கிறார் ஜெயலலிதா
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் மார்ச் 2ம் தேதி முதல்வராகப் பதவியேற்பார் எனஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை அதிமுக தலைவராக அவர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். தனது அமைச்சரவையின்ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்பித்தார். ஆளுநரும் அதை ஏற்றுக் கொண்டு, புதிய அரசு அமையும் வரைஅவரையே பதவியில் நீடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா அதிமுக சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதமும் ஆளுநரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்க அழைப்புவிடுத்துவிட்டார்.
இதற்கிடையே ஜெயலலிதா எப்போது முதல்வர் பதவியை ஏற்பார் என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வந்தது.ஜோசியர் அறிவுரைப்படி அவர் தனது பிறந்த நட்சத்திரமான மாசி மகம் நட்சத்திர தினமான 25ம் தேதி பதவிஏற்பார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால், மார்ச் 2ம் தேதி தான் அவர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர்மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மார்ச் 2ம் தேதி காலை 10.50 மணிக்கு சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும். ஆளுநர் ராம் மோகன் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவியேற்கும்போது இப்போதைய அமைச்சர்கள் பலர் பதவி இழப்பர் என்று தெரிகிறது.
1991ம் ஆண்டு இதே பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில்தான் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications