முதுமலை காட்டுத் தீயில் 400 ஹெக்டேர் சேதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதுமலைக் காட்டில் பரவி வரும் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதுமலை சரணாலயகாப்பாளர் அசோக் குப்புராட்டி கூறியுள்ளார்.

முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் கடந்த 13ம் தேதி சிறிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. அது கடந்த இரண்டுநாட்களாக பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் காட்டுக்குள் இருக்கும் வன விலங்குகள் உயிர் தப்புவதற்காக கிராமப்பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.

இதன் காரணமாக முதுமலை சரணாலயத்தின் சிறப்பு அம்சமான யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமைமுதல் சரணாலயம் மூடப்படவுள்ளது.

இதற்கிடையே சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீயை காப்பாளர் அசோக் குப்புராட்டி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காட்டுத் தீக்கு இதுவரை 400 ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 12இடங்களில் தீ எரிந்து வருகிறது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படை வீரர்கள், வன அதிகாரிகள், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் தேசியசேவைப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+