உவமையில் விளையாடிய வைரமுத்து
சென்னை:
வார்த்தைகளில் விளையாடும் கவியரசு வைரமுத்து வித்தியாசமான உவமை தந்து கலைஞர் கருணாநிதி உட்படஅனைவரையும் பரவசப்படுத்தினார்.
ஸ்டாலின் மகன் திருமண விழாவில் பேசிய வைரமுத்து மணமக்களை பாலும் நீரும் போல இணைந்து வாழவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் ஜோக் அடிப்பதாக அனைவரும் நினைத்து சிரிக்க அதற்கு அவர் தந்தவிளக்கம்:
இமையும்-விழியும் போல, உடலும்-உயிரும் போல என்று பல உவமைகளைக் காட்டி மணமக்கள் எப்படி வாழவேண்டும் என்று இங்கு பல பெருமக்கள் பேசினார்கள். ஆனால் நான் இந்த மணமக்களைப் பாலும், நீரும் போலவாழ வாழ்த்துகிறேன்.
பாலில் தண்ணீர் கலந்தவுடன், பால் தன் நிறத்தையும், குணத்தையும் தண்ணீருக்கு வழங்குகிறது. பிறகு பால்வேறல்ல, தண்ணீர் வேறல்ல என்றாகிறது.
பிறகு பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கும் போது பாலுடன் இருந்த தண்ணீர் ஆவியாக மாறிப் பாலில்இருந்து பிரிய ஆரம்பிக்கிறது.
தன்னுடன் இணைந்திருந்த தண்ணீர் ஆவியாவதைப் பார்த்து வேதனைப்படும் பால் உடனே பொங்கி வழிந்து,எரியும் அடுப்பை அணைத்திட முயற்சிக்கிறது.
இதைப் பார்க்கும் தாய்மார்கள், கொதிக்கும் பால் மீது சில துளி தண்ணீரைத் தெளிக்கின்றனர். உடனே தம்முடன்இருந்து பிரிந்து சென்ற தண்ணீர் மீண்டும் வந்து விட்டதாகக் கருதி பாலும் சாந்தமாகி விடுகிறது.
எனவே மணமக்கள் பாலும் நீரும் போல் இணை பிரியாது வாழ வேண்டும் என்று வாழ்த்தினேன்.
வைரமுத்து இந்த விளக்கத்தை கேட்ட கருணாநிதி கைதட்ட அரங்கமே அதிரும் வகையில் ஒட்டுமொத்தக்கூட்டமும் கரவொலி எழுப்பியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications