ராம பக்தர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைப்பு: 55 பேர் பலி
அகமதாபாத்:
அயோத்தியிலிருந்து அகமதாபாத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்இன்று (புதன்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் மற்றும் ஆசிட் குண்டுளை எறிந்ததால்ஏற்பட்ட தீயில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் வரை தீக்காயமடைந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு முன்பாக நடைபெறும் "பூர்ணயுக்தி" பூஜையில் கலந்து கொண்டுகுஜராத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராம பக்தர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் மூலம் அகமதாபாத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்த ரயிலின் 4க்கும் மேற்பட்ட பெட்டிகளை ஆக்கிரமித்திருந்த ராம பக்தர்கள், பகவான் ராமர் பற்றியகோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இந்த ரயில் குஜராத் மாநிலம் கோத்ரா என்ற நகரை இன்று காலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் 8.30மணிக்குக் கிளம்பியபோது, அடையாளம் தெரியாத சிலர் இந்த ரயிலைப் பயங்கரமாகத் தாக்கினர். பின்னர் ராமபக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்த 4 பெட்டிகளில் பெட்ரோல் மற்றும் ஆசிட் குண்டுகளை வீசிவிட்டுஅவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் 4 ரயில் பெட்டிகளும் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்தன. ராம பக்தர்கள் கலவரத்துடன் கூக்குரல்எழுப்பினர்.
ஆனாலும் தீயில் சிக்கி 55 ராம பக்தர்கள் ரயில் பெட்டியிலேயே உயிருடன் எரிந்து சாம்பலாயினர். மேலும்தீயினால் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இச்சம்பவத்தில் ராம பக்தர்கள் பயணம் செய்த 4 ரயில் பெட்டிகளும் தீயில் முழுமையாக எரிந்து சேதமாகின.
இச்சம்பவம் நாடெங்கிலும் உள்ள ராம பக்தர்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது
இச்சம்பவத்தையடுத்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கோத்ரா நகரில் பெரும் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே அயோத்யாவில் "பூர்ணயுக்தி" பூஜையில் கலந்து கொண்டுவிட்டு அகமதாபாத் திரும்ப வேண்டிய 6பெண்கள் உள்பட 32 ராம பக்தர்களைக் காணவில்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் குஜராத் மாநிலப்பொதுச் செயலாளர் தேவிஜிபாய் ராவட் புகார் கூறியுள்ளார்.
வாஜ்பாய் அதிர்ச்சி:
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிரதமர் வாஜ்பாய் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு, இதற்குக் கடும்கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதிலுமிருந்து ராம பக்தர்களை அழைப்பதை வி.எச்.பி. உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்வானி கடும் கண்டனம்:
இந்நிலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் நடத்தி, தீவைக்கப்பட்ட சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் அழைத்த அத்வானி, தாக்குதல் நடத்தியவர்கள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications