ஆப்கன் பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
டெல்லி:
ஆப்கானிஸ்தான் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ஹமீத் கர்சாய்க்குநேற்று (செவ்வாய்க்கிழமை) சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே பல ஆப்காகானிஸ்தான் அமைச்சர்கள் வந்துபோன நிலையில், தற்போது ஹமீத் கர்சாயும் வந்துள்ளார்.அவருடன் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும் வந்துள்ளார்.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர்உள்பட பல அமைச்சர்களும் டெல்லி விமான நிலையத்தில் கர்சாய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்து சிறப்பானவரவேற்பு அளித்தனர்.
பின்னர் இந்தியத் தொழில்துறை சம்மேளனம் நடத்திய ஒரு கூட்டத்தில் நேற்றிரவு கர்சாய் கலந்து கொண்டார்.அப்போது, ஆப்கானிஸ்தானில் தொழில் தொடங்க இந்தியத் தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் முழு அமைதி திரும்பி விட்டதாலும் அங்கு தொழில் தொடங்கினால் நிறைய லாபம்அடையலாம் என்பதாலும் இந்தியத் தொழில் நிறுவனங்கள் அங்கு தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும்கர்சாய் கூறினார்.
பின்னர் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதுகுறித்தும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் கர்சாய் 35 நிமிடங்கள் பேசினார்.
ஆப்கானுக்கு இந்தியா ரூ.50 கோடி உதவி:
இதற்கிடையே ஆப்கானிஸ்தானுக்கு ரூ.50 கோடி உடனடி உதவித் தொகையாக வழங்கப்படும என்று இந்தியாஇன்று அறிவித்தது.
கர்சாயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய வாஜ்பாய், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications