இலங்கை பிரச்சனை: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்டுள்ள நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்கா ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, இவ்விஷயத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நார்வே தூதுக்குழு மேற்கொண்ட முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிரந்தரபோர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் இலங்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதுஎன்றும் அதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிரந்தரப் போர்நிறுத்தத்தில் விடுதலைப்புலிகள் கையெழுத்திட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அரசியல் விரோதம் காரணமாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சந்திரிகா முயல்கிறார். இந்த ஒப்பந்தத்தால்இலங்கையில் அமைதி ஏற்படும் என்று நினைத்திருந்தவர்கள் தற்போது கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.
இந்தியர்களும் மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டால்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும்.இதுகுறித்து சோனியா காந்தியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இது குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளேன் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ்கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications