பட்ஜெட்: ராணுவத்திற்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடு
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடுமையான பதற்றம் சூழ்ந்து காணப்படுவதையடுத்து, அங்கு தொடர்ந்து ராணுவவீரர்களை நிறுத்த வேண்டியிருப்பதால் ராணுவத்திற்கு கடந்த ஆண்டைவிட ரூ.8,000 கோடி அதிகமாகஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்பாதுகாப்புத் துறைக்காக ரூ.65,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
கடந்த ஆண்டு இத்துறைக்கு ரூ.57,000 மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவத்தைக் குவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்காக அதிகம் செலவாகும் என்பதால் இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் அதிக ஒதுக்கீடு செய்யவும் தயார் என்றும் சின்ஹாகுறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அவாக்ஸ், ஹாக் ரக போர் விமானங்களையும் சில பீரங்கிகளையும் ராடார் கருவிகளையும்ஆயுதங்களையும் இந்திய ராணுவம் விரைவில் வாங்கவுள்ளது.
தபால் கட்டணம் உயர்வு
இதற்கிடையே தபால் கட்டணமும் 25 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டின் விலை ரூ.6ஆகவும் இன்லேன்ட் லெட்டரின் விலை ரூ.2.50ஆகவும்உயர்ந்துள்ளன.
அதேபோல் அஞ்சல் உறையின் விலை ரூ.4லிருந்து ரூ.5ஆகவும் போட்டி தபால் கார்டின் விலை ரூ.10ஆகவும்உயர்ந்துள்ளன.
மேலும் சிகரெட், யூரியா ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.
நாட்டின் நிதி நிலையை உணர்ந்துள்ள மக்கள் இந்த பட்ஜெட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் வாஜ்பாய்நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் சமையல் கேஸ் மற்றும் கெரசின் ஆகியவற்றின் விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றுஎதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications