குஜராத்தில் பயங்கர வன்முறை: 20 பேர் பலி
அகமதாபாத்:
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (புதன்கிழமை) தாக்கப்பட்டு 58 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டசம்பவத்தையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் இன்று பயங்கர வன்முறை வெடித்ததில் 20 பேர்கொல்லப்பட்டனர்.
அயோத்தியிலிருந்து ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளை சில சமூக விரோதிகள்எரித்ததால் 58 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராமாநிலங்களில் முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்தது.
இதையடுத்து குஜராத்தில் இன்று பெரும் வன்முறை வெடித்தது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் பரோடாநகரின் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. இதில் 3 பேர் குத்திக் கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் கலவரக் கும்பலைபோலீசார் கலைத்தனர். இதற்கிடையே இங்கு ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மற்றொரு இடத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர வேறு 14பேர் பல்வேறு சம்பவங்களில் வன்முறைக்குப் பலியாகினர்.
ரயில் எரிப்புச் சம்பவம் நடந்த கோத்ரா நகரிலும் இன்று 2வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது.
குஜராத் தலைமை செயலக வளாகத்தில் தீவைப்பு
இதற்கிடையே குஜராத் தலைமை செயலகத்தின் பழைய வளாகத்தில் உள்ள வக்பு போர்டு அலுவலகத்தைஅடையாளம் தெரியாத 40 பேர் கொண்ட கும்பல் இன்று காலை 11.20 மணிக்கு தீவைத்து எரித்தது.
இதில் அந்த அலுவலகத்தில் இருந்த பணம், ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் புத்தகங்கள் ஆகிய அனைத்தும்எரிந்து போயின.
ஆனால் அந்தக் கும்பல் வருவதைப் பார்த்தவுடன் இந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேறிதப்பியோடி விட்டதால் உயிர் பிழைத்தனர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications