குஜராத் ரயில் எரிப்பு சம்பவம்: ஐ.எஸ்.ஐ. சதியா?
டெல்லி:
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐக்குத்தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள சர்ச்சுகளைச் சேதப்படுத்தியதன் மூலம்இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரிப்பதற்கு ஐ.எஸ்.ஐ. முயன்றுள்ளது.
அதே போல் இப்போது ராம பக்தர்களைத் தாக்கியதன் மூலம் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரித்து நாட்டின்ஒற்றுமையைக் குலைப்பதற்கு ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளதாக சந்தேகப்படும் பெர்னாண்டஸ், இதுகுறித்து முழுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
எல்லையில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளபோது, நாட்டின் உள் பகுதிகளில் மத வன்முறையைத்தூண்டிவிட ஐ.எஸ்.ஐ. நினைத்திருக்கலாம் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
இந்த ரயிலில்தான் ராம பக்தர்கள் வருகிறார்கள் என்பதை அறிந்து நன்றாகத் திட்டமிட்டே இந்தத் தாக்குதலைவிஷமிகள் நடத்தியுள்ளனர் என்றும் கூறிய பெர்னாண்டஸ், அயோத்தி பிரச்சனையில் விரைவில் தீர்வு காணப்படும்என்று தெரிவித்தார்.
2 கவுன்சிலர்கள் உள்பட 66 பேர் கைது
இதற்கிடையே ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக கோத்ரா நகரசபையைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் உள்பட 66 பேர்இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோத்ரா நகரசபைத் தலைவரையும் வேறு 2 கவுன்சிலர்களையும்போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. பல இடங்களில்தீவைப்புச் சம்பவங்களும் கல்லெறிச் சம்பவங்களும் நடந்திருப்பதால் ஏராளமான நகரங்கள் போர்க்களம் போல்காட்சியளிக்கின்றன.
குஜராத்தில் 1,000 பாரா மிலிட்டரி வீரர்கள் குவிப்பு
இதற்கிடையே குஜராத் வன்முறையைக் கட்டுப்படுத்த 1,000 பாரா மிலிட்டரி வீரர்களை அனுப்ப மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி இன்று உத்தரவிட்டார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க 11 கம்பெனி பாரா மிலிட்டரி வீரர்கள்உடனடியாக அம்மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய பந்த்திற்கு வி.எச்.பி. அழைப்பு
இந்நிலையில் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக பிரதமர் பதவியிலிருந்து வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள்கோரிக்கை விடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் வி.எச்.பி. கூறியுள்ளது.
மத்திய அரசை "ராவண ராஜ்ஜியம்" என்று வர்ணித்த வி.எச்.பி., அத்வானி பெரிய அளவில் பேச மட்டும்தான்செய்கிறார், ஆனால் ஒன்றும் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications