ராஜ்ய சபா தேர்தல்: 4 அதிமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு
சென்னை:
ராஜ்ய சபாவுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இவற்றில் அதிமுக 4 இடங்கள் வரை ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது.
ராஜ்ய சபா அதிமுக எம்.பிக்கள் நிறைகுளத்தான், சவுந்தரராஜன், திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, சுப்பையன்மற்றும் தமிழ் மாநில காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன்முடிவடைகிறது.
மேலும், மாநில அமைச்சராகி விட்டதால் தனது பதவியை தளவாய் சுந்தரம் ராஜினாமா செய்துள்ளதால் அந்தஇடம் காலியாக உள்ளது. இதையடுத்து 6 காலியிடங்களுக்கும் மார்ச் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு ராஜ்யசபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின்ஆதரவு தேவை.எனவே காலியாக உள்ள 6 இடங்களில் 4 இடங்கள் வரை அதிமுக வேட்பாளர்கள் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் ஒரு இடத்தில் பாரதீய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் திமுகபோட்டியிட்டு வெல்லலாம்.
6-வது இடத்தில் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்று தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனை அந்த இடத்தில் போட்டியிட வைக்க தமாகா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமாகாவுக்கு சட்டசபையில் 23 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இந்திய கம்யூனிஸ்ட் (5), மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் (6) ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவை. இந்தக் கட்சிகள் தமாகாவுக்கு ஆதரவு அளிக்கும் என்றுதெரிகிறது.
ராஜ்யசபா எம்.பி. ஆவதன் மூலம் டெல்லியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள ஜி.கே.வாசன்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி











Click it and Unblock the Notifications