குஜராத் வன்முறை: தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு
சென்னை:
குஜராத்தில் தற்போது பெரும் வன்முறை நடந்து வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்தபகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளைகுஜராத் மாநிலம் கோத்ரா நகர் ரயில் நிலையத்தில் சில சமூக விரோதிகள் எரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரிந்து போயினர். இதையடுத்து குஜராத்தின் பெரும்பாலான நகரங்களில்வன்முறை வெடித்துள்ளது. அகமதாபாத், பரோடா, காந்திநகர் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பதட்டம் நிறைந்ததாக கருதப்படும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறுமத்திய உள்துறை செயலகம் உத்தரவிட்டிருந்தது. இதன் படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறை தலைவர் நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படும் இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூடுதல்போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில்கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து வண்டிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும் ரயில்வேபோலீசார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனைசெய்யப்படுவார்கள்.
மேலும் விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் போலீசார் கூடுதலாக பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர் என்று நெய்வால் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications