நாடாளுமன்றத்தில் அமளி: பேச்சு நடத்த வி.எச்.பி. தயார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவியதையடுத்து இரு அவைகளும்ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றக் கூட்டம் இன்று ஆரம்பித்த உடனேயே லோக்சபாவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி,ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

குஜராத் கலவரத்தை அடக்க மத்திய அரசு தவறி விட்டது என்று கோஷம் எழுப்பிய எதிர்க் கட்சிகள் மத்திய அரசுஉடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கூறி அமளியில் ஈடுபட்டன.

சபையின் மையப் பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நண்பகல் 12 மணி வரை சபைஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் பாலயோகி அறிவித்தார்.

ராஜ்யசபாவிலும் இப்பிரச்சனை எதிரொலித்தது. குஜராத் வன்முறை குறித்துப் பேச காங்கிரஸ் உறுப்பினர்மன்மோகன் சிங் முயற்சித்தார்.

ஆனால் அவருடைய முயற்சிக்குப் பலனில்லாமல் போகவே காங்கிரஸ் உறுப்பினர்கள் கத்தி களேபரம் செய்தனர்.இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார் ராஜ்யசபா நாயகரும் துணை ஜனாதிபதியுமானகிருஷ்ண காந்த்.

பேச்சு நடத்த வி.எச்.பி. தயார்

இதற்கிடையே மத்திய அரசுடன் அயோத்தி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத்சம்மதம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சனை குறித்து இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்று கூறியிருந்த வி.எச்.பி. அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு மற்றும் மத்திய அரசின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கிணங்க கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.

முதற்கட்டமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் வி.எச்.பி. தலைவர்கள் நேற்று இரவு பேச்சுவார்த்தையைத்துவக்கினர்.

மேலும் ராமர் கோவில் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வழி செய்யப்படும் என்று மத்திய அரசின்உறுதிமொழியை அடுத்தும் வி.எச்.பி. தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+