வட மாநிலங்களில் தொடங்கியது பந்த்
டெல்லி:
குஜராத் வன்முறை தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வட மாநிலங்களில் பெரும்பாலான ஆதரவு இருந்தது.
குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பாலும் வசிக்கும் மாநிலங்களில் எல்லாம் இன்றைய பந்த்திற்கு ஆதரவு இருந்துவருகிறது.
அசாம், பீகார் மாநிலங்களிலும் இன்று காலை பந்த் தொடங்கியது.
அசாமில் இந்த பந்த்திற்கு ஓரளவு ஆதரவு இருந்த போதிலும், இதுவரை எந்த வன் செயலும் அங்கு நடக்கவில்லை.
பீகாரிலும் இதுவரை எந்தவிதமான தகாத செயலும் நடந்திருப்பதாகத் தகவல் இல்லை. இந்நிலையில் பாட்னாவில்பல கடைகள் திறந்துள்ளன. சாலை, ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு எதுவும் இல்லை.
ஆனால் ஒரிசா, மேகாலயா போன்ற மாநிலங்களில் பந்த்தின் பாதிப்பு எதுவும் இல்லை. மக்கள் வழக்கம்போலஅலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றனர். போக்குவரத்திலும் பாதிப்பில்லை.
தென் மாநிலங்களில் கேரளா தவிர எந்த மாநிலத்திலும் பந்த் நடக்கவில்லை. திருவனந்தபுரத்தில் முஸ்லீம்கள்அதிகமாக இருப்பதால் அங்கு இன்று பந்த்திற்கு ஆதரவு இருந்தது. அங்கு இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications