அகமதாபாத் அருகே காருடன் ஒரு குடும்பமே எரித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
நரோடா:
அகமதாபாத் அருகே உள்ள நரோடாவில் காரில் சென்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை அந்தக்காருடன் சேர்த்து கலவரக்காரர்கள் எரித்துக் கொன்று விட்டனர்.
கலவரக்காரர்களைப் பார்த்ததும் அந்தக் காரில் உள்ளவர்கள் காரை விட்டுக் கீழே இறங்க முயற்சித்தனர்.
ஆனால் அவர்களைக் காரிலிருந்து இறங்க விடாமல் சுற்றி வளைத்துக் கொண்டு தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள்,அந்தக் காரின் கதவுகளைத் திறக்க முடியாத அளவுக்குக் கம்பிகளால் இறுகக் கட்டி, பின்னர் காருக்குத் தீவைத்தனர்.
இந்தப் பயங்கரமான சம்பவத்தில் அந்தக் காரிலிருந்த 8 பேருமே உயிருடன் எரிந்து கருகிப் போயினர்.இவர்களில்5 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications