பா.ஜ.கவுக்கு கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரத்தை வைத்து நாடு முழுவதும் வன்முறை பரவியுள்ளதையடுத்து இது குறித்து விவாதிக்கஉடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதில் அங்கம்வகிக்கும் கட்சிகள் பிரதமரை வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.

இந்தப் பிரச்சனை குறித்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பேச பிரதமர் முடிவு செய்துள்ளார். முன்னதாகஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனும் பேசினார்.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளவில்லை. இதனால், அந்தக் கட்சிகள்எரிச்சலைடைந்துள்ளன. இந்தக் கூட்டத்தைக் கூட்டினால் கூட்டணித் தலைவர்களின் கேள்விகளுக்குப் பதில் தரமுடியாத நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்படும்.
குறிப்பாக திமுக, தெலுங்கு தேசம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்தந்த்ரிக் கட்சி ஆகியவை அயோத்திவிஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால் தான் முதலில்சர்ச்சசைக்ககு உட்படாத நிலத்தை வி.எச்.பிக்கு தருவது குறித்து யோசிப்போம் என்று கூறிய வாஜ்பாய் இந்தக்கட்சிகளின் எதிர்ப்பால் தனது நிலையை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந் நிலையில் தே.ஜ.க. கூட்டணிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பா.ஜ.கவுக்கு கூட்டணிக் கட்சிகள்நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளன. தே.ஜ.க. கூட்டம் சமீப காலத்தில் நடக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+