அகமதாபாத்தில் வன்முறை தொடர்கிறது: ராணுவம் அணிவகுப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

வன்முறை தாண்டவமாடிவரும் அகமதாபாத் நகரில் போலீசாரையே பார்க்க முடியவில்லை. வன்முறை நடக்குமஇடத்துக்கே போலீசார் வர மறுத்து வருகின்றனர். இதனால் முழுக்க முழுக்க ராணுவத்தை தான் மக்கள்நம்பியுள்ளனர்.

ஆனால், ராணுவம் இன்று காலை தான் அகமதாபாத் வந்திறங்கியது. வந்தவுடன பாதுகாப்புப் பணியைதொடங்கிவிட்டது. ராணுவம் இருக்கும் இடங்களில் வன்முறை ஓய்ந்தாலும் பிற இடங்களில் தொடர்ந்து கடைகளைஎரிப்பது, வாகனங்களோடு சேர்த்து அதில் இருப்பவர்களை எரிப்பது, சாலையில் செல்பவர்களை கத்தியால்குத்துவது போன்ற பயங்கர செயல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளன.

ரயில் எரிப்பு சம்பவம் நடந்த கோத்ரா அருகே உள்ள தொழிற்சாலைகளை வன்முறைக் கும்பல்கள் எரித்துவருகின்றன. முடிவெட்டும் கடைக்குக் கூட தீ வைக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் இன்னொரு புறம் நகர் முழுவதும் வன்முறைதொடர்ந்து கொண்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலையிலேயே ராணுவத்தினர் இங்கு வந்துசேர்ந்து விட்டனர். முதல்கட்டமாக (முதல் பிரிகேட்) 3,500 ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். மற்றொரு பிரிகேட்விரைவில் வந்து சேரவுள்ளது.

குஜராத்திற்கு அனுப்பப்பட்டுள்ள 13 கம்பெனி ராணுவத்தினரில் 9 கம்பெனி வீரர்கள் அகமதாபாத் நகரில்குவிக்கப்பட்டுள்ளனர்.

111 பேரைப் வன்முறைக்குப் பலிகொடுத்த அகமதாபாத்தில் இந்த ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு மூலம்அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டதும் சுட உத்தரவு

குஜராத் மாநிலத்தில் வன்முறை அதிகமாக நடந்துள்ள அகமதாபாத் நகரில் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக்கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் மீதுசுடவும் தயங்க வேண்டாம் என்று மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரா, கர்நாடகத்திலும் வன்முறை:

இதற்கிடையே ஆந்திராவில் நடந்த பந்த்தின்போது பல இடங்களிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாவிட்டாலும் அங்கு முழு அடைப்புக்கு முழுஆதரவு இருந்தது.

மேலும் அலாகாபாத்-முகல்சாராய் ரயிலை வி.எச்.பி. அமைப்பினர் செல்ல விடாமல் ரயில் தண்டவாளத்தின்குறுக்கே படுத்து போராட்டம் நடத்தினர்.

கான்பூரில் வாகனங்கள் மீது கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்ததையடுத்து அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

ராஜஸ்தானிலும் பந்த்திற்கு முழு ஆதரவு இருந்தது. ஆனால் மேற்கு வங்காளத்தில் பந்த்தினால் பாதிப்பில்லை.

கர்நாடக மாநிலம் கோலார் நகரில் கல்வீச்சு சம்வங்கள் நடந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+