போனதை செலவில் வைப்போம்... வந்ததை வரவில் வைப்போம்..
சென்னை:
நாளை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதாவுடன் பதவியேற்கப் போகும் பழைய அமைச்சர்கள் 10 பேர்தான். இவர்கள் மட்டுமே பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர். ஆனாலும், இவர்களிலும் சிலரின்இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலரிடம் இருந்த கூடுதல் இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
1. பொன்னையன்- சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்த இவரிடம் இருந்த சட்டத்துறைபறிக்கப்பட்டுள்ளது. இனி இவர் வெறும் பண அமைச்சர் தான்.
2. ஜெயக்குமார்- மின்துறை அமைச்சராக இருந்த இவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது. பொன்னையனிடம் இருந்துபறிக்கப்பட்ட சட்டத்துறை இவரிடம் தரப்பட்டுள்ளது.
3. தளவாய் சுந்தரம்- பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இவர் இப்போது வருவாய்த்துறை அமைச்சராகிறார்.பன்னீர்செல்வம் தான் முதலில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், அவர்முதல்வராக்கப்பட்டபோது இந்தத் துறை தளவாயின் பொறுப்பில் போனது. ஆண்டிப்பட்டியில் தனது துறையின்செல்வாக்கை பயன்படுத்தி கரன்சிகளை கொட்டிய தளவாய்க்கு இப்போது நிரந்தரமாக பொதுப்பணித்துறையேகிடைத்திருக்கிறது.
4. நயினார் நாகேந்திரன்- போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் இப்போது மின்துறை அமைச்சராக மாறுகிறார்.போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தான் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வந்து தமிழகம் ஸ்தம்பித்தது. இதனால்தான் இந்தத் துறை மாற்றமாம். சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.இவர் வசம் இருந்த போக்குவரத்துத்துறை விஸ்வநாதனிடம் போகிறது. (விஸ்வநாதன் கடந்த மே மாதத்தில்ஜெயலலிதா முதல்வரானபோது அமைச்சாரானார். சில வாரங்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.)
5. வேலுச்சாமி- வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவருக்கு அதை விட மேலான தொழில்துறையும் கூடவேவணிக வரித்துறையும் கிடைத்திருக்கிறது. ஏன் இந்த பிரமோஷன் என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே தெரியும்.
6. தம்பிதுரை- கல்வித்துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
7. செம்மலை- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவே தொடரவுள்ளார்.
8. துரைராஜ்- உள்ளாட்சித் துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
9. ராமசாமி- அறநிலையத்துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
10. தனபால்- கூட்டுறவுத்துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
11. வளர்மதி- சமூகநலத்துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
12. ஜீவானந்தம்- வேளாண்மைத்துறை அமைச்சராகவே தொடர்கிறார்.
13. தலை தப்பிய 13வது அமைச்சர் நம்ம பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதா முதல்வரானபோது வருவாய்த்துறைஅமைச்சரானவர் முதல்வராகவும் உயர்ந்தார்.
இப்போது அவருக்கு தளவாய் வசம் இருந்த பொதுப்பணித்துறை தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications