ஜெ. நாளை பதவியேற்பு: 10 அமைச்சர்கள் பதவி காலி: 13 பேர் புதுமுகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் நாளை பதவியேற்கிறார். அவருடன் 27 பேர் கொண்ட அமைச்சரவையும்பதவியேற்கிறது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:

பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவையில் முதலமைச்சருக்கு அமைச்சரவையில் நம்பர்-டூ இடம் கிடைத்துள்ளது.அவருக்கு மிக முக்கிய அமைச்சரவைப் பதவி தரப்படவுள்ளது.

ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவர்களில் 13 பேர் புதியவர்கள். ஏற்கனவேஅமைச்சர்களாக இருந்த 10 பேரின் பதவிகளை ஜெயலலிதா பறித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சில வாரங்களே அமைச்சராக இருந்த ஆர்.விஸ்வநாதன் மீண்டும்அமைச்சராகிறார். இவர்களுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும்சென்னையில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ளசென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் மாபெரும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.அலங்கார வளைவுகளும் வண்ண வண்ண போஸ்டர்களுமாய் சென்னை பரபரப்பாகியுள்ளது.

5 மாதங்களுக்குப் பின் மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+