பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க கருணாநிதி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி இன்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் சிறிதாகக் கிளம்பிய தீப்பிளம்பு இன்று பெரும் எரிமலையாகவெடித்துள்ளது.

சபர்மதி ரயிலில் போதுமான அளவுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால், 58 உயிர்கள்கொல்லப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதைத் தொடர்ந்து இவ்வளவு வன்முறையும் ஏற்பட்டிருக்காது.

மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்குப் பதிலாக இத்தகைய வன்முறைச் சம்பவங்களை ஏற்படுத்தும் சமூகவிரோதிகளால் தேசத்தின் ஒற்றுமையே பாதிக்கப்பட்டுள்ளது.

வன்முறையின் மூலம் எந்தவிதமான பலனும் யாருக்கும் கிடைக்காது. எனவே வன்முறையைக் கைவிட்டு மத்தியஅரசு எடுத்துக் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

அதேபோல் வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பிடித்து பாரபட்சம் இன்றி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+