"அமைதி ஒப்பந்தத்தை சந்திரிகா எதிர்க்கவில்லை"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கைத் தமிழர் பிரச்சினை தீருவது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எடுத்து வரும் முயற்சிகளுக்குஅதிபர் சந்திரிகா முழு ஆதரவு அளிப்பதாக அவரது ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கதிர்காமர் நேற்று (வியாழக்கிழமை) சென்னை வந்திருந்தார். இங்குள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எடுத்து வரும் அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திராக முழு ஆதரவுதெரிவித்துள்ளார். அமைதி உடன்பாட்டை அவர் எதிர்ப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.

விக்கிரமசிங்கேவுக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதிஒப்பந்தத்தில் சில தவறுகள் இருப்பதாக அதிபர் உணர்ந்துள்ளார்.

இவற்றை ஆராய்வதற்காக அவர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழு ஒப்பந்தத்தை ஆராய்ந்து அதுகுறித்துஅதிபருக்குத் தெரிவிக்கும்.

இதுதொடர்பாக விக்கிரமசிங்கேவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார் என்றார் கதிர்காமர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+