ஜனாதிபதியை சந்திக்கும் எதிர்க் கட்சிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தி பிரச்சனையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்துக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக இன்று மாலை எதிர்க் கட்சித் தலைவர்கள் கே.ஆர். நாராயணனை சந்திக்கின்றனர்.
இந் நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கைவிடுத்துள்ளார். ரயில் எரிப்பில் கர சேவகர்கள் உயிருடன கொளுத்தப்பட்டதைக் கடுமையாக கண்டித்துள்ள அவர்அதற்கு பதிலடியாக வன்முறையில் ஈடுபடுவதை அனைத்துத் தரப்பினரும் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications