பாகிஸ்தானில் கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
இந்தியாவில் ராமஜென்ம பூமி தொடர்பாக வன்முறை மூண்டுள்ளதையடுத்து பாகிஸ்தானில் உள்ளகோவில்களுக்கு அந் நாட்டு அரசு போலீஸ் பாதுகாப்புப் போட்டுள்ளது.
முன்பு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் பல இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன.இப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் நடந்து வரும்வன்முறை பாகிஸ்தானுக்கும் பரவலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் வன்முறைக்கு இந்திய அரசைக் குறை கூறி பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.இதனால் அங்கு வன்முறை பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications