முதல்வர் நாற்காலி: பன்னீருக்கு இன்று கடைசி நாள்
சென்னை:
தமிழகத்திலிருந்து காலியாகவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் முதல்வர்பன்னீர்செல்வம் போட்டியிடலாம் என்று புதிதாகக் கசிந்து கொண்டிருக்கும் செய்திகள் கூறுகின்றன.
பன்னீர்செல்வத்திற்கு இன்றுதான் தமிழக முதல்வராக (மார்ச் 1) கடைசி நாள். நாளை காலை 10.50 மணிக்குஜெயலலிதா புதிய முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அதன் பிறகு பன்னீர்செல்வம் என்னவாக இருக்கப்போகிறார் என்ற கேள்வி தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் தலையையும் குடைந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெகுப் பொருத்தமாக வந்துள்ளது ராஜ்யசபா தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 4இடங்களில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. ஒரே ஒரு இடத்தில் திமுக ஜெயிக்கலாம். மீதமுள்ளஓரிடத்தில் தமாகா போராடி ஜெயிக்கலாம்.
அதிமுக சார்பில் போட்டியிடப் போகும் 4 பேர் யார் என்ற விவாதம் இப்போதே அதிமுகவில் ஆரம்பித்து விட்டது.அதில் முக்கியமாக 2 பெயர்கள்தான் அதிகம் அடிபடுகின்றன. அதில் ஒருவர் பன்னீர்செல்வம். இன்னொருவர்ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த தங்கத்தமிழ்ச் செல்வன்.
இந்த 2 பேரும் ஒரு வகையில் ஜெயலலிதாவுக்காகத் தியாகம் செய்தவர்கள். தனது தலைவிக்காக எம்.எல்.ஏ.பதவியை தியாகம் செய்தவர் தங்க தமிழ்ச் செல்வன். பன்னீர்செல்வத்தின் தியாகம் குறித்து அதிகம் சொல்லத்தேவையில்லை.
முதல்வர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கக் கூடிய தகுதியான ஒரே பதவி எம்.பி.பதவிதான் என்று அதிமுக வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.
முதல்வர் பதவி அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எம்.பி. பதவியை கொடுப்பதன் மூலம் பன்னீர்செல்வத்தைத்திருப்திப்படுத்தியதாகவும் இருக்கும், அவருக்கு நல்ல கெளவரத்தையும் கொடுத்ததாக இருக்கும் என்றுஅதிமுகவினர் கருதுகிறார்கள். மேலும், அம்மாவின் இதயத்தில் இடம் பிடித்து விட்ட பன்னீர்செல்வத்திற்கு எம்.பி.பதவியைத் தர ஜெயலலிதா தயங்க மாட்டார் என்றும் காரணம் கூறப்படுகிறது.
மேலும், பன்னீர்செல்வம் சுத்தமானவர், அமைதியானவர், அடக்கமானவர். இந்த இமேஜ் டெல்லி வட்டாரத்தில்கட்சிக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்று ஜெயலலிதா கருதுவதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை பன்னீர்செல்வம் எம்.பியாகி விட்டால், அவரது பெரியகுளம் சட்டசபைத் தொகுதியில் அதிமுகவைச்சேர்ந்த, அம்மாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரமுகர் போட்டியிடலாம்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளுடன் சேர்த்து பெரியகுளத்திற்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்றுகூறப்படுகிறது.
இதேபோல, ஆண்டிப்பட்டி தொகுதியை தனக்காக தாரை வார்த்ததோடு, தனது வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டதங்கத்தமிழ்ச் செல்வனுக்கு எம்.பி பதவியை கொடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தங்கதமிழ்ச் செல்வன் செய்த தியாகத்திற்குக் கொடுக்கப்படும் பரிசாக அதிமுகவினர் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications